January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் மாற்றம்

இந்தியாவுக்கு எதிரான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்திலிருந்து வில் புகோவ்ஸ்கி நீக்கப்பட்டுள்ளார். இதனை அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் உறுதிசெய்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து வில் புகோவ்ஸ்கி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க்கஸ் ஹெரிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

வில் புகோவ்ஸ்கி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளானதுடன் அதிலிருந்து அவர் பூரண குணமடையாததே இதற்கு காரணமாகும்.மூன்றாவது போட்டியில் இடம்பெற்ற ஏனைய வீரர்கள் நான்காவது டெஸ்டிலும் பங்கேற்பார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய அணி வீரர்களான ரவீந்ர ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். அவர்கள் உபாதையிலிருந்து இன்னும் பூரண குணமடையவில்லை.

எவ்வாறாயினும்ரூபவ் ஜஸ்பிரிட் பும்ராவும்ரூபவ் ரவிச்சந்திரன் அஸ்வினும் விளையாடுவார்களா இல்லையா என்பது போட்டி நடைபெறும் நாள் காலையில் வீரர்களின் உடற்றகுதியை பரிசோதித்தப் பின்னரே தீர்மானிக்கப்படும் என
இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிப்பதுடன் நான்காவது போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.