July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்பெய்ன் சுப்பர் கப் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பார்ஸிலோனா

Football.

ஸ்பெய்னில் நடைபெறும் கழகங்களுக்கிடையிலான சுப்பர் கப் கால்பந்தாட்டத் தொடரில் பார்ஸிலோனா கழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ரியால் சொஸிடேட் கழக அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பெனால்டி சூட் அவுட்டில் வெற்றிபெற்று பார்ஸிலோனா கழக அணி இறுதிப் போட்டியை உறுதிசெய்துகொண்டது.

போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலை வகித்தன. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் வாய்ப்பு வழக்கப்பட்டது. அதில் பார்ஸிலோனா கழக அணி வீரர்கள் பிரகாசித்த போதிலும் ரியால் சொஸிடேட் அணி வீரர்களால் இலக்கை அடைய முடியவில்லை.

இதற்கமைய பெனால்டி சூட் அவுட்டில் வெற்றியை உறுதிசெய்துகொண்ட பார்ஸிலோனா கழக அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டிக்கான மற்றைய அணியை தெரிவுசெய்யும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ரியால் மெட்ரிட் மற்றும் அத்லடிகோ பில்பாவோ கழக அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இதில் வெற்றிபெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சுப்பர் கப் சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பார்ஸிலோனா கழக அணியுடன் விளையாடவுள்ளது.