இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த் 7 வருடங்கள் தடையின் பின்னர் மீண்டும் வந்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் போட்டிகளின் போது ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஸ்ரீ சாந்துக்கு ஆயுட்கால போட்டித்தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்ததுடன் அதன் பின்பு தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
அந்தத் தடை முடிவுக்கு வந்துள்ளதுடன், மாநில தொடரான சையத் முஸ்டாக் உள்ளுர் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. கேரள அணிக்காக விளையாடும் ஸ்ரீசாந்த் முதல் போட்டியில் புதுச்சேரி அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
போட்டியில் கேரள அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தொடரானது இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபது20 தொடருக்கான இந்திய குழாத்தை தெரிவுசெய்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் சிறப்பாக செயற்பட்டால் இந்திய அணிக்கு தேர்வாகிவிடலாம் எனும் எதிர்பார்ப்பில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.