
இந்திய பட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஓபனில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இவருக்கு அங்கே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்போது சாய்னா நெவாலுக்கு கொரோன தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
30 வயதான இவர் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விழாவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். எனினும், தாய்லாந்து ஓபனில் அவரால் பங்குபற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சாய்னா நெவால் தாய்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சாய்னா நெவால் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து மீண்ட இவருக்கு இரண்டாவது தடவையாக கொரோனா ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.