July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெய்னுக்கு சவால் விடுத்த அஸ்வின்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்த பெருமை அஸ்வினையும், விஹாரியையுமே சாரும். அந்த வகையில் அவர்கள் புத்திசாலித்தனமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது அவுஸ்திரேலிய வீரர்கள் வார்த்தைப் பிரயோக உத்தியை கையாண்டு இவர்களை ஆட்டமிழக்கச் செய்வதற்கு முயற்சித்தனர்.

ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் பிரிஸ்பேனுக்கு விரைவாக போக வேண்டும் வாருங்கள் என்று அஸ்வினைப் பார்த்து கிண்ணடலாகக் கூறியுள்ளார். இவர்கள் ஆட்டமிழந்து விட்டால் இந்தப் போட்டி விரைவாக முடிந்து விடும். அப்போது அடுத்த போட்டி நடைபெறும் பிரிஸ்பேனுக்கு செல்லலாம் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொறுமையிழந்த அஸ்வின் ஆம். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். அதுவே உங்களுடைய கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என சவாலாக பதிலளித்துள்ளார். இது தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளதுடன் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிரப்படுகிறது.

எவ்வாறாயினும், அடுத்த ஓவரில் அஸ்வின் கொடுத்த பிடியை டிம் பெய்ன் தவறவிட்டார். மறுபக்கம் மானஸ் லபுசேன் அனுமா விஹாரியின் பிடியொன்றை தவறவிட்டார். இதுவும் அவுஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பை தகர்த்தது.