
பாகிஸ்தானில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் குவெட்டா கிளெடியேடர்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெய்ல் விளையாடவுள்ளார்.
வீரர்களுக்கான ஏலத்தில் அவரை குவெட்டா கிளெடியேடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
அத்துடன் இங்கிலாந்தின் டொம் பென்டன், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டேன் ஆகியோரும் குவெட்டா கிளெடியேடர்ஸ் அணியால் ஏலத்தில் பெறப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 20 முதல் மார்ச் 22 வரை பாகிஸ்தானில் முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இந்த தொடர் பாகிஸ்தானில் ஓராண்டுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள சர்வதேச மட்டத்திலான கிரிக்கெட் தொடராகும்.