July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – அவுஸ்திரேலிய மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு 50 சதவீத வாய்ப்பில் இரண்டு அணிகளும்

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியில் இரண்டு அணிகளுக்குமே வெற்றிபெறுவதற்கு சரிசமமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனினும் துடுப்பாட்டத்தில் புத்திசாலித்தனமாக செயற்பட்டால் இந்திய அணி வெற்றிபெறுவது அவ்வளவு சிரமாக இருக்காது என்ற நிலையே தோன்றியுள்ளது.

துடுப்பாட்டத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணித்தலைவர் அஜின்கெயா ரஹானேவின் கரங்களிலேயே இந்திய அணியின் வெற்றி தங்கியுள்ளது எனும் நிலையே உருவாகியுள்ளது.

சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 338 ஓட்டங்களையும், இந்தியா 244 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை அவுஸ்திரேலியா தொடர்ந்தது.

மானஸ் லபுசேன் 47 ஓட்டங்களுடனும்ää ஸ்டீவன் ஸ்மித் 29 ஓட்டங்களுடனும் களமிறங்கினர். சூழ்நிலைக்கு ஏற்ப சாதுரியமாக துடுப்பெடுத்தாடிய இவர்கள் மூன்றாம் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அரைச்சதமடித்த மானஸ் லபுசேன் 73 ஓட்டங்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 81 ஓட்டங்களுடனும் வெளியேறினார்கள். அடுத்துவந்த மெத்திவ் வேட் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் ஒருநாள் போட்டியைப் போன்று விளையாடிய கெமரூன் கிறீனும், டிம் பெய்னும் 104 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய கெமரூன் கிறீன் 4 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 84 ஓட்டங்களைப் பெறறு அவுஸ்திரேலிய அணியை தரமான நிலைக்கு கொண்டு சென்றார்.

அணித்தலைவர் டிம் பெய்ன் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார். அப்போது அவுஸ்திரேலிய அணி 312 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றி டிலக்கு 407 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் அந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இந்தியா சார்பாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் முதல் விக்கெட்டுக்காக 71 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ரோஹித் சர்மா 52 ஓட்டங்களுனும், சுப்மன் கில் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது. இதன்படி கடைசி நாளான நாளைய தினம் இந்தியா வெற்றிபெற கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் மேலும் 309 ஓட்டங்களைப் பெற வேண்யுள்ளது.

செட்டிஸ்வர் புஜாரா 9 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் அஜின்கெயா ரஹானே 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். இவர்கள் இருவரும் நாளை சிறப்பாக செயற்பட்டால் இந்திய அணியால நிச்சயம் வெற்றிபெற முடியும்.

சுழல்பந்துவீச்சாளரான ரவீந்ர ஜடேஜா காயமடைந்;துள்ளதால் அவர் இந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாடுவதும் சந்தேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.