January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேஷிய பட்மிண்டன் வீரர்கள் மூவருக்கு ஆயுட்கால தடை

இந்தோனேஷிய பட்மிண்டன் வீரர்கள் மூவருக்கு சர்வதேச பட்மிண்டன் சம்மேளனம் ஆயுட்கால தடை விதித்துள்ளது.

சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக இந்த மூன்று வீரர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கிண்ண பட்மிண்டன் போட்டிகள் வரை இவர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட எஞ்சிய 5 வீரர்களுக்கு 6 முதல் 12 ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பல லட்சம் ரூபா அபராதமும் இவர்களுக்கு விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.