January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வீரர்களின் உபாதை அணிக்கு சுமையானது’

தென் ஆபிரிக்க கிரிக்கெட் விஜயத்தை முடித்துக்கொண்ட இலங்கை அணி ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியது. இதன்போது இலங்கை அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2-0 என தென் ஆபிரிக்க அணியிடம் தொடரை இழந்து நாடு திரும்பிய இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்;

வீரர்கள் பலர் உபாதைக்குள்ளானதால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.தனிமைப்படுத்தலுக்கு மத்தியில் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்களின் மனோதிடத்தை வலிமையாக்க முடியாதுள்ளது. தோல்விகளால் வீரர்கள் அச்சத்துடனேயே துடுப்பெடுத்தாடினர்.

புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கின்றோம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் எனவும் இலங்கை அணித்தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.