July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

 களத்தடுப்பில் தடுமாறிய இந்தியா;சவாலான நிலைக்கு உயர அவுஸ்திரேலியா முயற்சி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டுக்கு மத்தியில் நடந்து முடிந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது. முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வில் புகோவொஸ்கியை ஆட்டமிழக்கச் செய்யக் கிடைத்த மூன்று வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்.

விக்கெட் காப்பாளரான ரிஸப் பந்த் இரண்டு சந்தர்ப்பங்களில் வில் புகோவொஸ்கியின் பிடிகளை தவறவிட்டதுடன் பும்ரா ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட வில் புகோவொஸ்கி அரைச்சதமடித்து 62 ஓட்டங்களைப் பெற்றார்.

டேவிட் வோனர் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் மானஸ் லபுசேன் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்று அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தார்.

வில் புகோவொஸ்கி மற்றும் மானஸ் லபுசேன் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

பந்துவீச்சில் நவ்தீப் சைனி, மொஹமட் ஸிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதேவேளை, இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும் சந்தர்ப்பத்தில் பாரத் மாதாவின் தேசிய கீதத்துக்கு மொஹமட் ஸிராஜ் கண்ணீர் விட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.