November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீடு திரும்பினார் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவருமான சௌரவ் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் கடந்த சில நாட்களாக வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். தற்போது நோய் குணமடைந்த நிலையில் கங்குலி வீ டு திரும்பியிருக்கிறார்.

48 வயதாகும் சௌரவ் கங்குலி இன்னும் சில தினங்களுக்கு ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.