ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடர் கடந்த வருடம் அதீத முயற்சிகளின் பின்னர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் 14 ஆம் கட்டம் இவ்வருடம் நடைபெறவுள்ளது.இந்தத் தொடரை எங்கு நடத்துவதென இன்னும் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், தொடர் இந்தியாவில் நடந்தால் மைதானங்களின் எண்ணிக்கையை குறைப்பதென திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கான ஏலம் அடுத்த மாதம் இணையத்தளம் ஊடாக நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியும் தம்வசம் வைத்துக்கொள்ளும் வீரர்களுடனான அணியை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பு அறிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.