
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வெண்ணிற ஜேர்ஸியை அணிவது பெருமைமிக்க தருணம் என்று தமிழக வீரரான நடராஜன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி சார்பாக சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கு தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதேபோன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் காத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சாளரான உமேஸ் யாதவ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளானார்.
இதனால் இந்திய டெஸ்ட் குழாத்தில் நடராஜனுக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் வெண்ணிற ஜேர்ஸியுடன் படம் பிடித்து டுவிட்டரில் நடராஜன் பதிவிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ சீருடையை அணிவது மிகுந்த பெருமைக்குரிய தருணம் என்று தனது டுவிட்டர் பதிவில் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.
A proud moment to wear the white jersey
Ready for the next set of challenges
#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021