June 16, 2025 15:20:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரொனால்டோ சாதனை

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் உலகிலேயே அதிக பின்தொடர்வோரை கொண்டவர் என்ற சாதனை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணித்தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 250 மில்லியனை கடந்துள்ளது.
இதன்மூலம் 25 கோடி மக்களை தமது பின்தொடர்வோராக வைத்துள்ள உலகின் முதலாமவர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

மென்செஸ்டர் யுனைடட், மென்செஸ்டர் சிட்டி அணிகளின் முன்னாள் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியின் யுவான்டஸ் கழக அணிக்காக விளையாடுகிறார்.