January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லா லீகா கால்பந்தாட்டத்தில் அத்லடிகோ மெட்ரிட் அணி வெற்றி

ஸ்பெய்னின் லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் ஜெடாபி கழக அணிக்கு எதிரான போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் அத்லடிகோ மெட்ரிட் அணி வெற்றியீட்டியது.

மெட்ரிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் அத்லடிகோ மெட்ரிட் அணி முதல் கோலைப் போட்டது. 20 ஆவது நிமிடத்தில் லூவிஸ் சுவாரெஸ் அந்த கோலைப் போட்டார்.

ஜெடாபி அணியால் முதல் பாதியில் கோலடிக்க முடியவில்லை. அதற்கமைய முதல் பாதியில் 1-0 என அத்லடிகோ மெட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் ஒருவராலும் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் போட்டி 1-0 என அத்லடிகோ மெட்ரிட் அணி வசமானது.

இந்த வெற்றியுடன் லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் புள்ளிகள் பட்டியலில் அத்லகோ மெட்ரிட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அவர்களுக்கு 35 புள்ளிகள் கிடைத்துள்ளன.

ரியால் மெட்ரிட் கழக அணி 33 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் இருக்கின்றது.