November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஓபன்: கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் டொமினிக் தீம்!

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மிகவும் கடுமையாகப் போராடி -அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்-ஐ வீழ்த்தி – வெற்றி வாகை சூடினார் டொமினிக் தீம்.

தனது முந்தைய மூன்று பெரும் இறுதி ஆட்ட வாய்ப்புகளின்போது தொல்வியை சந்திருந்த தீம், இம்முறையும் தோல்வியையே தழுவுவார் என்று நம்பும் அளவுக்கு முதல் இரண்டு செட்களையும் இழந்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து உத்வேகத்துடன் ஆடிய தீம், 2-6 4-6 6-4 6-3 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். ஆர்ஜென்டீனா வீரர் கெஸ்டன் கௌடியோ பிரெஞ்சு ஓபனில் 2004இல் இரண்டு செட்கள் பின்தங்கியிருந்த நிலையில் மீண்டு வந்து வெற்றி பெற்றார். அதேபோல் ஆரம்பத்தில் இரண்டு செட்களை இழந்திருந்த தீம், பின்னர் அடுத்தடுத்த செட்களில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தினார்.

2004ம் ஆண்டுக்குப் பின்னர் 2செட் பின்னடைவிலிருந்து மீண்டுவந்து கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் வீரர் தீம் தான். அத்தோடு கிரான்ட் ஸ்லாம் பட்டம்முதன்முறையாக 1990களில் பிறந்த வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.

இதனிடையே, 27 வயது தீமுடன் மோதிய 23 வயதான அலெக்‌ஷாண்டர் ஸ்வெரெவ்-க்கு இது முதலாவது கிரான்ட் ஸ்லாம் இறுதியாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.