
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோரை அவர் விஞ்சியுள்ளார்.
இதற்கு முன்பு இந்தத் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தையும் கோஹ்லி இராண்டாமிடத்தையும் வகித்தனர். கேன் வில்லியம்ஸன் மூன்றாமிடத்தில் இருந்தார்.
எனினும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமும் பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் கேன் வில்லியம்ஸன் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
புதிய தரவரிசையில் விராத் கோஹ்லி இரண்டாமிடத்திலும், ஸ்டீவன் ஸ்மித் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.