April 29, 2025 14:57:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிரான்ட் ஸ்லாம்’ பட்டத்தை வென்றார் நயோமி ஒசாகா!

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசெரென்காவை 1-6 6-3 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார் ஜப்பானின் நயோமி ஒசாகா.

முதல் செட்டில் சற்று பின்னடைந்து, இரண்டாவது செட்டிலும் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தனது தீவிர முயற்சியால் நயோமி ஒசாகா இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபனை கைப்பற்றியுள்ளார்.

31 வயதான விக்டோரியா 2013க்குப் பின்னர் முதல்முறையாக கிரான்ட் ஸ்லாம் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியிருந்தார்.முதல் சுற்றில் அபாரமாக ஆடினாலும் அவரால் தொடர்ச்சியாக அதே வேகத்துடன் தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விட்டது. 2018இல் அமெரிக்க ஓபனையும் 2019இல் ஒஸ்ட்ரேலிய ஓபனையும் வென்ற 22 வயதான நயோமி ஒசாகா, அவர் போட்டியிட்ட எல்லா கிரான்ட் ஸ்லாம் இறுதி ஆட்டத்திலும் வெற்றிகளை உறுதி செய்துவிட்டார்.