January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய – இந்திய வீரர்கள் தொடர்ந்தும் மெல்போர்னில் பயிற்சி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்தும் மெல்போர்னில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மெல்போர்னில் தங்கியிருப்பார்கள் என கூறப்படுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸட் போட்டி சிட்னியில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி திட்டமிட்டபடி அதே திகதியில் சிட்னியில் ஆரம்பமாகும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிட்டினியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படும் என பரவலாக கருத்துகள் வெளியாகின. இதற்கு மறுப்புத் தெரிவித்தே போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படமாட்டது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும், தற்போதைய சூழலில் இரண்டு அணி வீரர்களும் சிட்னிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சிட்னிக்கான பயணம் தற்போதைக்கு 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மெல்போர்னிலேயே தங்கியிருந்து பயிற்சிகளை முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் பயிற்சி பெறுவதற்கு இரண்டு நாட்கள் மாத்திரமே கிட்டவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.