July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெஸ்ட் தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நியூஸிலாந்து இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

நியூஸிலாந்து இந்த வருடத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், அந்த ஐந்து போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றிபெற்றது. தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றிகொண்டு மேலும் முன்னேறியது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலியாவைவிட தசம் புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றிபெற மறுபக்கம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்தது.

இதன் பிரகாரம் நியூஸிலாந்து 117 புள்ளிகளுடன் முதலிடத்தைக் கைப்பற்ற அவுஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை அடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்து முதலிடத்தைப் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.