January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய டெஸ்ட் அணியுடன் இணைகிறார் சர்மா

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா குறிப்பிட்ட இடைவெளியின் பின்னர் அணியுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவர் சிட்னியில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது உபாதைக்குள்ளான ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய விஜயத்தில் சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது20 தொடர்களை இழந்தார். எனினும், உடற்தகுதியை நிரூபித்த அவருக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 16 ஆம் திகதி சிட்னியை சென்றடைந்த அவர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் கட்டமாக 14 நாட்கள் சுயதனிமையில் வைக்கப்பட்டார்.

அதன் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

அணித்தலைவர் விராத் கோஹ்லியும் அணியில் இல்லாததால் ரோஹித் சர்மாவின் வருகை அணி வீரர்களுக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.