January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மூன்றாவது போட்டி இடமாற்றப்படமாட்டது’

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி ஜனவரி 7 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிட்னியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிட்னிக்கு புதிதாக வருவோர், தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிப் பழகியோர் 14 நாட்கள் தனிமைக்குட்படுத்தப்படுகின்றனர்.

இந்திய, அவுஸ்திரேலிய வீரர்கள் இனிதான் சிட்னிக்கு பயணமாகவுள்ளனர். இதனால் அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியிலிருந்து இடமாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால், அவ்வாறானதொரு தேவை இன்னும் ஏற்படவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநில அரச அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் போட்டியை சிட்னியிலேயே நடத்துவதென தீர்மானிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. நான்காவதும் இறுதியுமான போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.