June 17, 2025 23:05:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபராதத்துடன் புள்ளிகளையும் இழந்த அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 40 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் பங்கேற்றுள்ள அவுஸ்திரேலிய அணியின் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்துவீசத் தவறியமையே அதற்கு காரணமாகும்.

இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது அவுஸ்திரேலிய வீரர்கள் காலதாமதமாகவே பந்துவீசியுள்ளனர். இதன் காரணமாக அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு 40 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் அவுஸ்திரேலிய அணிக்கு 4 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.