October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சி அணியை ஐ.பி.எல் அணி என சாடிய அக்தர்

சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களை வைத்து அதிசிறந்த உலக பதினொருவர் கனவு அணியை வெளியிட்டது.

இதில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது20 கனவு அணிகளும் பெயரிடப்பட்டன.

எனினும், இவை உலக பதினொருவர் அணிகளல்ல. ஐ.பி.எல் அணிகள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சொஹைப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த மூன்று அணிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் எவரும் இல்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அக்தர்,

பாகிஸ்தான் ஐ.சி.சியின் உறுப்பினர் என்பதையும், இருபது20 போட்டிகளில் விளையாடுகிறது என்பதையும் மறந்துவிட்டார்கள் எனவும், தற்போது இருபது20 ஐ.சி.சியின் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் பாபர் அசாம் என்பதை நினைவுகூர விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தொம்ஸன், வசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோரும் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களும், சுழல்பந்துவீச்சாளர்களும் உங்களுடைய கனவு அணியில் எங்கே என்றும் அக்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐ.சி.சி மூன்று வருடங்களில் இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களையும், லீக் தொடர்களையும் நடத்த முயற்சிப்பதாகவும், அவர்களின் இலக்கு பணம் மாத்திரமே எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இருபது20 அரங்கில் பாபர் அசாமை தவிர சிறந்த வீரர் இருக்க முடியாது என்பதுடன் விராத் கோஹ்லியின் துடுப்பாட்ட சராசரியைவிட பாபர் அசாமின் துடுப்பாட்ட சராசரி சிறப்பாக உள்ளது எனவும் சொஹைப் அக்தர் மேலும் கூறியுள்ளார்.