February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்றாவது போட்டியிலும் வோனர் இல்லை?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனரால் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உபாதையிலிருந்து அவர் இன்னும் பூரண குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் போது உபாதைக்குள்ளான அவர் சர்வதேச இருபது20 மற்றும் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இழந்தார். இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்விலிருக்கும் அவர் இன்னும் குணமடையவில்லை என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வோனர் இடம்பெறுகின்றமை சந்தேகமே என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பிக்க அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

சிட்டினியில் கொரோனா அபாய நிலைமை அதிகரித்துள்ளதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா எனும் சந்தேகம் எழுந்திருந்தது. எனினும், அத்தகைய தீர்மானங்கள் ஏதும் எடுக்க ப்பட்டதா இல்லையா என்று இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.