January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் பிரகாசிக்கத் தவறிய ஸ்மித்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஓட்டங்களைக் குவித்து மிரளவைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித்துக்கு இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்த அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ஸ்டீவன் ஸ்மித்தே துடுப்பாட்டத்தில் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

என்றாலும் அவர் அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல்பந்து வீச்சில் சிக்கி ஆட்டமிழந்துள்ளார். ஸ்டீவன் ஸ்மித் 2660 ஓட்டங்களைப் பெற்றதன் பின்னர் இவ்வாறு இன்னிங்ஸ் ஒன்றில் ஓட்டமின்றி ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மெல்போர்னில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததுடன், பதிலெடுத்தாடும் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றுள்ளது.