
இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரரான சேத்தன் சர்மா தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையின் வருடாந்த கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் வருடாந்த கூட்டம் 24 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. 2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக்குழுவில் முன்னாள் வீரர்களான சேத்தன் சர்மா, அபே குருவிலா, மொகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் ஏற்கனவே உறுப்பினர்களாகவுள்ள சுனில் ஜோஸி, ஹர்விந்தர் சிங் ஆகியோரும் இணைந்து செயற்படவுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டுமொரு தடவை சேவையாற்ற கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது என புதிய தெரிவுக்குழுவின் தலைவரான சேத்தன் சர்மா கூறியுள்ளார். தம்மால் இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு வழிசெய்ய முடிந்தால் அதுவே தனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி கலந்த திருப்தி என்றும் சேத்தன் சர்மா குறிப்பிட்டுள்ளார்.