இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனர், வேகப்பந்து வீச்சாளர் சீன் அபொட் ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் போது டேவிட் வோனர் காயமடைந்தார். அந்தக் காயத்திலிருந்து இன்னும் அவர் பூரண குணமடையாததால் இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பயிற்சியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் சீன அபொட் அதிலிருந்து மீண்டுள்ளார். எனினும், அவர் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள சிட்னியிலிருந்து வருகை தருவதால் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டியுள்ளது. இதனால் அவர் இரண்டாவது போட்டியில் இடம்பெறமாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய முதல் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய அணியே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.