June 17, 2025 5:00:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை-இங்கிலாந்து தொடர் நடைபெறுமா?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்தில் புதியதொரு வைரஸ் பரவிவருவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து ஆர்வத்துடன் இருக்கின்றபோதிலும் இலங்கை தொடரை நடத்துவதில் மீண்டும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி ஜனவரி 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதுடன், 14ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து சொந்த மண்ணிலிருந்து புறப்படும்போதும் இலங்கையை அடையும்போதும் விசேட சுகாதார வழிமுறைகளை கையாள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்ததுடன், அதற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தருணத்தில் கொரோனா அச்சம் காரணமாக முழு இலங்கையும் முடக்கப்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டு இங்கிலாந்து அணி திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.