
தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் மிகவும் மோசமான பருவகாலம் இதுவென ஆர்ஜன்டீனா நட்சத்திர வீரரான லியோனல் மெஸி தெரிவித்துள்ளார்.
பார்ஸிலோனா கழகத்துக்காக விளையாடிவரும் அவர் தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு கழகத்தை விட்டு வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் கால்பந்தாட்ட உலகில் பெரும் பூதாகரமாக வெடித்திருந்தது.
எனினும் அவருக்கு அந்த அனுமதி கிடைக்கவில்லை என்பதுடன், தொடர்ந்தும் அவர் பார்ஸிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள 33 வயதுடைய மெஸி தனது மனவருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பருவகாலத்தை மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தபோதிலும் அது ஏமாற்றத்தில் முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது இதுவே சரியென தாம் உணர்வதாகவும் பருவகாலம் மோசமானதாகவே அமைந்தது என்றே எண்ணுவதாகவும் மெஸி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வெலன்சியா கழக அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கோலொன்றைப் போட்ட மெஸி கழகமொன்றுக்காக அதிக கோல்களைப் போட்ட முன்னாள் ஜாம்பவான் பேலேவின் 643 கோல்கள் உலக சாதனையை சமப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.