(Photo: File Photo/Barmy Army)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இடம்பெறும் போட்டித் தொடரில் கலந்துகொள்வதற்காக உலக பிரசித்திபெற்ற ‘பார்மி – ஆர்மி’யின் கேலிக்கைகள் மற்றும் பாடல் நிகழ்வுகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உலகின் தற்போதைய சூழலையொட்டி போட்டித் தொடரை மைதானத்தில் கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. இந்த சர்வதேச போட்டித் தொடரை ரசிக்கவிருந்த ஏராளமான ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த போட்டித் தொடரில் கலந்துகொள்வது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உத்தியோகப்பூர்வ ரசிகர் குழாமான ‘பார்மி ஆர்மி’ கேள்வி எழுப்பியபோது அதற்கு அனுமதி வழங்க முடியாத காரணத்தை கூறியதையடுத்து மேற்படி குழு அதை ஏற்றுக் கொண்டது.
இந்த போட்டித் தொடருக்கு பார்வையாளர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஸ்லி டி சில்வா கூறினார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டியுள்ளதால் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
1994/1995 இலிருந்து ஆசஸ் தொடரில் பார்மி-ஆர்மி ஒரு பிரதான இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது. அதுமுதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயணிக்கும் இடங்களுக்கெல்லாம் பார்மி ஆர்மிக் குழுவும் செல்லும்.
கடந்த மார்ச்சில் போட்டித் தொடருக்காக இங்கிலாந்து அணி இலங்கையில் தங்கியிருந்தபோது விளையாட்டு ரசிகர்களை கவரும் வகையில் இந்த குழுவினர் வந்திருந்தபோதிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நேர காலத்துடனேயே இக்குழு தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.