Photo: Sunil Gavaskar/Twitter)
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மாற்று வழிகளை கண்டுபிடிக்காவிட்டால் இந்திய அணி “வைட் வோஷ்” செய்யப்படுவதை தடுக்க முடியாது என முன்னாள் நட்சத்திர வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியால் 36 ஓட்டங்களையே மொத்தமாகப் பெறமுடிந்தது. இதனை மனதில் வைத்தே சுனில் கவாஸ்கர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்டில மாற்று வியூகங்களை வகுக்காவிட்டால் தொடரை முழுவதுமாக இழப்பதனை தவிர்க்க முடியாமல் போய்விடும் என்றும் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறந்த ஆரம்பத்தைப் பெற வேண்டும்.
நேர்மறையாக சிந்தித்தால் இந்திய அணியால் பழைய நிலைக்கு திரும்பலாம் எனவும் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்திறனை மேம்படுத்துவதற்கு ராகுல் ட்ராவிட்டை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு முன்னாள் வீரரான வெங்சர்கார் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேற்கத்தைய நாடுகளில் பொக்ஸிங் டே என வர்ணிக்கப்படும் டிசம்பர் 26 ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.