July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெய்ல், அப்ரிடி, திசர மீண்டும் களத்தில்

அபுதாபி ரி10 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல், டுவேன் பிராவோ மற்றும் பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அணிக்கு 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ரி10 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரில் அபுதாபி அணிக்காக கிறிஸ் கெய்ல் விளையாடவுள்ளார்.டுவேன் பிராவோ டெல்லி புல்ஸ் அணிக்காகவும், ஆன்ரே ரஸல் வடக்கு வொரியர்ஸ் அணிக்காகவும், சுனில் நரைன் டெக்கான் கிளடியேர்டஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.

சொஹைப் மாலிக் மாரதா அரேபியன்ஸ் அணிக்காகவும், இலங்கையின் திசர பெரேரா பூனே டெவில்ஸ் அணிக்காகவும், இசுரு உதான பங்ளா டைகர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.