

இலங்கையைச் சேர்ந்த குறுந்தூர ஓட்டவீரரான யுப்புன் அபேக்கோன் (Yupun Abeykoon) 100 மீட்டர் தூரத்தை 10.16 வினாடிகளில் ஓடி புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனைய நிலைநாட்டியுள்ளார். தற்போது இத்தாலியில் தங்கியிருக்கும் யுப்புன் அபேக்கோன், ஜெர்மனியின் டெஸ்ஸாவ் (Dessau) நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டி ஒன்றிலேயே இன்று செவ்வாய்க்கிழமை இந்த சாதனையை படைத்துள்ளார்.
26 வயதான யுப்புன் ஜேர்மனியின் நட்சத்திர தடகள வீரர்களுள் ஒருவரான டெனிஸ் அல்மஸை வீழ்த்தி குறித்த போட்டியில் வெற்றியினை தனதாக்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.இந்த 10.16 வினாடி நேரப்பெறுதியானது யுப்புன் அபேக்கோனின் தனிப்பட்ட சிறந்த பெறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், தேசிய மற்றும் தெற்காசிய சாதனையினை -100 மீட்டரை 10.22 வினாடிகளில் ஓடிமுடித்திருந்த – ஹிமாஷ ஈஷான் வைத்திருந்தார்.