(Photo: mohammed shami/ Facebook)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸதிரேலியாவுக்கு எதரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மொஹமட் சமியால் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் பந்துவீசும் போது காலில் அவருக்கு உபாதை ஏற்பட்டது.
வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொஹமட் சமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவர் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் சமி நாடு திரும்புவதால் அவருக்கு பதிலாக மொஹமட் ஸிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வீரராக நடராஜனும் இந்திய குழாத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.