January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கால்பந்தாட்டம்: பேலேவின் சாதனையை சமன்செய்த மெஸி

Photo: Leo Messi/ Facebook)

பிரேஸிலின் ‘கறுப்பு முத்து’ என வர்ணிக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேவின் சாதனையை ஆர்ஜென்டீன நட்சத்திரமான லியோனல் மெஸி சமப்படுத்தியுள்ளார்.

ஸ்பெய்னின் ‘லா லீகா’ கால்பந்தாட்டத் தொடரில் ‘பார்ஸிலோனா’ கழகத்துக்காக விளையாடும் மெஸி ‘வெலன்சியா’ கழக அணிக்கு எதிரான போட்டியில் கோலொன்றைப் போட்டார். இந்தப் போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.

எவ்வாறாயினும், பார்ஸிலோனா கழகம் சார்பாக மெஸி போட்ட 643 ஆவது கோலாகும். 2004 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் பார்ஸிலோனா கழகத்துடன் இணைந்த அவர் 748 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

இதன்மூலம் பேலேவின் சாதனையை மெஸி சமன்செய்தார்.

பேலே 1956 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் சாண்டோஸ் கழகத்துக்காக இணைந்துகொண்டதுடன் 1974 வரை 665 போட்டிகளில் விளையாடி 643 கோல்களைப் போட்டு சாதனைப் படைத்திருந்தார்.

லியோனல் மெஸியின் பங்களிப்புடன் பார்ஸிலோனா கழக அணி 10 தடவைகள் லா லீகா சாம்பியன் பட்டத்தையும், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.