Robert Lewandowski / Twitter
ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கு போலந்தின் ரொபர்ட் லெவன்டொவ்ஸ்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் வருடாந்தம் அதிசிறந்த வீரர், வீராங்கனை மற்றும் நடுவர்கள், கழகங்கள் என தெரிவுசெய்து விருது வழங்கி கௌரவிக்கிறது.
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது போலந்தின் ரொபர்ட் லெவன்டொவ்ஸ்கி வசமானது. முன்னாள் நட்சத்திரமான ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸி, போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை பின்தள்ளியே அவர் இந்த விருதுக்கு பாத்திரமானார்.
கடந்த பருவ காலத்தில் அவர் 47 போட்டிகளில் 55 கோல்களைப் போட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் போட்டவராகவும் ரொபர்ட் லெவன்டொஸ்கி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஜேர்மன் லீக் கால்பந்தாட்டத்தில் பயேன் மியூனிச் அணி சாம்பியனாகவும் காரணமாயிருந்தார். இது சர்வதேச கால்பந்தாட்டத்தின் ரொபர்ட் லெவன்டொவ்ஸ்கிற்கு முதலாவது சாம்பியன் பட்டமாகும்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிசிறந்த வீரர் விருதை கடந்த ஆண்டு லியோனல் மெஸியும், அதற்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவும்வென்றுள்ளனர்.
2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆர்ஜென்டினா, பிரேஸில் தவிர்ந்து விருது மற்றுமொரு வெளிநாட்டு வீரருக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.