
ஆண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டமான அவுஸ்திரேலிய ஓபன் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
டென்னிஸ் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான போட்டித் தொடர்கள் நடத்தப்படுவது வழமையாகும்.அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் ஆகிய டென்னிஸ் தொடர்களே அவை.
அந்தவகையில் ஆண்டில் முதல் அம்சமாக ஜனவரி மாதத்திலேயே அவுஸ்திரேலிய ஓபன் இதுவரை காலமும் நடத்தப்பட்டு வந்தது. எனினும் இவ்வருடம் கொரோனா அச்சத்தால் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதுடன் அவுஸ்திரேலிய ஓபன் தொடர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டங்களை வகுத்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி தொடர் ஆரம்பிக்கப்படும் எனவும் அதற்கு முன்னதாக போட்டிக்குத் தகுதி பெற்ற வீர வீராங்கனைகள் மெல்பேர்னில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.