January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவித்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆமிர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கீழ் விளையாட முடியாது என்றும் மொஹமட் ஆமிர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஆமிரின் ஓய்வு அறிவிப்பை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடனான முரண்பாடுகள் காரணமாக ஓய்வை அறிவித்துள்ள ஆமிர், ‘கிரிக்கெட் சபை தன்னை வேதனைக்குட்படுத்தியது’ என்று பாகிஸ்தான் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘ஆமிரின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வை அறிவித்துள்ளதாகவும், அவர் இதுவிடயமாக இனிமேல் வேறு இடங்களில் கதைக்க மாட்டார்’ என்று தாம் நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் வசீம் கான் தெரிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்காக இலங்கை வந்த ஆமிர், பாகிஸ்தான் திரும்பியதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.