January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரைப்படமாகும் உலக செஸ் சாம்பியனின் வாழ்க்கை வரலாறு…

சர்வதேச செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவரும், பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான விஷ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட உள்ளது.

உலக அளவில் மிகவும் பிரபலமான இவர் பல ஜாம்பவான்களை இந்த செஸ் போட்டியின் மூலம் முறியடித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இன்று செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள பலருக்கும் இவர் ரோல் மாடலாக இவர்தான்.
இந்நிலையில் விஷ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஹிந்தி இயக்குனர் எல்.ராய் என்பவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது தனுஷ் நடித்துவரும் அத்ராங்கி ரே என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக நடிகர் தனுசை வைத்து ரஞ்சனா என்ற படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் செஸ் சாம்பியன் விஷ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்று  படத்தில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடிக்க  உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே நடிகர் யார் என தெரியவரும்,.
சினிமா துறையில் தற்போது வாழ்க்கை வரலாற்று படங்களை எடுப்பது  பேஷனாகி விட்டது என்றே சொல்லலாம் .
அந்த வகையில் தற்போது முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை   ஒவ்வொரு இயக்குனர்களும் வரிசையாக படமாக்கி  வருவது குறிப்பிடத்தக்கது.