October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய வேகப்பந்தை சமாளிக்குமா இந்தியா?

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டித் தொடரானது இரண்டு அணிகளுக்கும் சவால் மிக்கதாய் அமைந்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் விராத் கோஹ்லி நம்பிக்கைக்குறிய வீரராகத் திகழ்கிறார். இளம் மற்றும் தேர்ச்சிபெற்ற திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் உள்ளனர்.

குறிப்பாக மயன்க் அகர்வர், பிரித்திவ் ஸா, செட்டிஸ்வர் புஜாரா, அஜின்கெயா ரஹானே, அனுமா விஹாரி, பிரித்திவ் ஸா, அஜின்கெயா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஸ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.

இந்திய அணி இந்தக் கிரிக்கெட் தொடரில் சர்வதே ஒருநாள் தொடரை இழந்ததுடன், சர்வதேச இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது. எனவே, டெஸ்ட் தொடரில் வெற்றிபெறும் அணியே பலம் வாய்ந்த அணியாக தீர்மானிக்கப்படும்.

அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களின் பலம் சற்று மேலோங்கிக் காணப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவுஸ்திரேலியர்கள் பிரகாசிக்க அதிக வாய்ப்புள்ளது.

போதாக்குறைக்கு வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டாக்கும் அவுஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். இதனால் இந்திய அணி சற்று நிதானத்துடன் ஆடினாலே தாக்கு பிடிக்க முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்மித்தே நம்பிக்கைக்குறிய வீரராக திகழ்கிறார். உயர எழும்பாத ஸ்லோ பௌண்சர் பந்துகளை எதிர்கொள்வதில் அவர் வல்லவராகவுள்ளார். டேவிட் வோனர் உபாதையால் நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்தி இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய துடுப்பாட்டத்துக்கும் அவுஸ்திரேலிய பந்துவீச்சுக்கும் இடையிலான சவாலாகவே உள்ளது.

போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவதால் இளஞ்சிவப்பு வர்ண பந்துகள் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ளன. இத்தகைய போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதில்லை என்பதால் அந்தக் குறையை நீக்குவதற்கு இந்த வருடம் முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.