ஸ்பெயினின் லாலீகா கால்பந்தாட்டத் தொடரில் நடப்புச் சாம்பியனான ரியல் மெட்ரிட் அணி மற்றொரு வெற்றியைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டியிலில் முன்னேறியுள்ளது.
போட்டியில் அத்லடிகோ மெட்ரிட் கழக அணியை 2-0 எனும் கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் கழக அணி வெற்றிகொண்டது.
மெட்ரிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் 15 ஆவது நிமிடத்தில் கேஸ்மீரோ முதல் கோலைப் போட்டார். அத்லடிகோ மெட்ரிட் அணி வீரர்கள் கோலடிக்க முயற்சித்த போதிலும் அது
பலனளிக்கவில்லை.
அதற்கமைய முதல் பாதியில் 1-0 எனும் கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் அத்லடிகோ மெட்ரிட் அணி வீரரான ஒப்லெக் இழைத்த தவறு காரணமாக ஓன்கோல் பதிவானது.
இதன் மூலம் ரியல் மெட்ரிட் அணியின் கோல் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. அதன் பிறகு இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடும் பிரயத்தனம் எடுத்தாலும் ஒருவராலும் அந்த இலக்கை அடையமுடியவில்லை.
இறுதியில் 2-0 என ரியல் மெட்ரிட் அணி வெற்றிவாகை சூடியது. இந்த வெற்றியின் பிரகாரம் புள்ளிகள் பட்டியலில் ரியல் மெட்ரிட் அணி மூன்றாம் இடத்துக்கு
முன்னேறியுள்ளது.
அவர்கள் 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 25 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 11போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள அத்லடிகோ மெட்ரிட் அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.