இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில் பலம் வாய்ந்த செல்சி கழக அணி 1-0 எனும் கோல் கணக்கில் எவர்டன் கழக அணியிடம் தோல்வியடைந்தது.
போட்டியில் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளின் வீரர்களும் சவாலாக விளையாடினார்கள். 22ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் சிகர்டஸன் கோலடித்தார். இது இந்த பருவகாலத்தில் அவர் போட்ட இரண்டாவது கோலாகும்.
செல்சி அணி வீரர்களின் கோலடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிய முதல் பாதி 1-0 எனும் கோல் கணக்கில் எவர்டன் அணி வசமானது.
இரண்டாம் பாதியில் செல்சி அணி வீரர்களை கோல் போட விடாமல் தடுத்த எவர்டன் அணி போட்டியை தனது ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டது. அதன்படி வெற்றியை 1-0 என எவர்டன் அணி தன்வசப்படுத்தியது.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில் செல்சி அணி மூன்றாமிடத்தில் இருப்பதுடன் எவர்டன் அணி ஏழாம் இடத்தில் உள்ளது.
எவர்டன் அணிக்கு இது ஆறாவது வெற்றியாகும். செல்சி அணியும் ஆறு வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.