January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியா பயணமாகிறார் ரோஹித் சர்மா

Photos:facebook/Rohit Sharma

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ் தொடருக்கான இந்திய குழாத்தில் இணைந்துகொள்ளத் தயாராகியுள்ளார். உபாதையிலிருந்து பூரண குணமடைந்துள்ள அவர் 13 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் சர்மாவுக்கு காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக அவர் இந்திய அணியுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. பெங்களுரில் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அவர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் தேர்ச்சி பெற்றார்.

இதனையடுத்து ரோஹித் சர்மா அவுஸ்திரேலியா பயணிப்பதற்கான அனுமதியை இந்திய கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது. என்றாலும் அவர் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றமை சந்தேகத்திற்குரியதே.

ஏனெனில், முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது போட்டி 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஆனால், ரோஹித் சர்மா அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

27 ஆம் திகதிக்கு பின்னரே அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு சர்மாவுக்கு கிடைக்கும். இதனால் மூன்றாவது, நான்காவது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.