
கொவிட் 19 அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக சாம்பியன்ஸிப் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தும் இலங்கையும் விளையாடவுள்ளன. கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தொடர் அப்போது இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இங்கிலாந்து டெஸ்ட் குழாம் பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடியிருந்தது. ஆனாலும், மார்ச் மாத இறுதியில் இலங்கையில் கொரோனா தொற்று உக்கிரமடைந்ததால் தொடர் பிற்போடப்பட்டது.
தற்போது 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தொடரை மீண்டும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் விசேட விமானம் மூலம் இங்கிலாந்து குழாம் நேரடியாக ஹம்பாந்தோட்டைக்கு வருகை தரவுள்ளதாகவும் அதன் பின்னர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் நடத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.