January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் டெஸ்டில் வோனர் இல்லை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலிருந்து உபாதையிலிருந்து பூரண குணமடையாத அவுஸ்திரேலிய நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வோனருக்கு உபாதை ஏற்பட்டது. அதன் பின்பு அவுஸ்திரேலிய அணி தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியையும் அவர் இழந்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் டேவிட் வோனருக்கு பதிலாக விளையாடும் மாற்று வீரர் யாரென்பதை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் உறுதியாக இதுவரை அறிவிக்கவில்லை.

எனினும் இந்திய அணியுடனான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் ஜோ பேர்ன்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.