அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரரான நடராஜனே ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருப்பார் என தாம் நினைத்ததாக அதிரடி துடுப்பாட்டக்காரரான ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மேற்படி கருத்தைக் கூறினார்.
அவுஸ்திரேலியா அணி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த சந்தர்ப்பத்தில் அபாரமாக பந்துவீசிய நடராஜன், 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலமே அவுஸ்திரேலியாவை 194 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது என ஹார்திக் பாண்டியா குறிப்பிடுகிறார்.
உண்மையிலேயே நடராஜனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனவும் அவரே ஆட்ட நாயகன் விருதுக்கு தெரிவாகியிருப்பார் என்று தாம் நினைத்ததாகவும் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.