October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது 20 தொடரிலிருந்து ஜடேஜா நீக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து முதல் போட்டியில் காயமடைந்த ரவீந்ர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார்.

முதல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியை 11 ஓட்டங்களால் இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் ரவீந்ர ஜடேஜா 44 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

அவரது துடுப்பாட்ட பங்களிப்பின் மூலமே இந்திய அணி முதல் சர்வதேச இருபது 20 போட்டியில் வெற்றிபெற்றது. ஆனாலும், காயமடைந்துள்ள ஜடேஜா அடுத்த இரண்டு இருபது 20 போட்டியிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜாவுக்கு பதிலாக ஸர்துல் தாகுல் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜடேஜா இன்றி அடுத்த இரண்டு போட்டிகளையும் இந்திய அணியால் வெல்ல முடியுமா என்பதும் சந்தேகத்திற்குரியதே.

இதேவேளை, சர்வதேச இருபது 20 தொடரை இழப்பதனை தவிர்க்க இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற வேண்டியது கட்டாயமாகும். தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் அவுஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாகப் போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.