ஐ.சி.சியின் இருபது 20 துடுப்பாட்ட தரவரிசையில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இருபது 20 துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதில் முதலிடத்தைப் பிடித்துள்ள இங்கிலாந்தின் டேவிட் மாலன் 915 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது இருபது 20 துடுப்பாட்ட வரிசையில் ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச புள்ளிகளாகும்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச் 900 புள்ளிகளைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அவர் 2018 ஆம் ஆண்டில் அந்த இலக்கை அடைந்திருந்தார். தற்போது அந்த சாதனை டாவிட் மாலனால் முறியடிக்கப்பட்டுள்ளது.
டேவிட் மாலன் தென் ஆபிரிக்காவுடன் முடிவுக்கு வந்த தொடரில் இரண்டு அரைச்சதங்களை விளாசியிருந்தார். ஏற்கனவே 3 அரைச்சதங்களையும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 103 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
டேவிட் மாலனைவிட 44 புள்ளிகளை குறைவாகப் பெற்றுள்ள பாகிஸ்தானின் பாபர் அசாம் இருபது 20 துடுப்பாட்ட தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.