June 16, 2025 17:16:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பியன்ஸ் லீக் கால்பந்து: சிறந்த 16 அணிகளின் சுற்றில் “லிவர்பூல்”

சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் சிறந்த 16 அணிகளின் சுற்றை ‘லிவர்பூல் கழக’ அணி உறுதிசெய்துள்ளது.

அஜக்ஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லிவர்பூல் கழக அணி இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இங்கிலாந்தின் அன்ஃபீல்ட்  மைதானத்தில் இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் லிவர்பூல் மற்றும் அஜக்ஸ் கழக அணிகள் ஒரு போட்டியில் விளையாடின.

போட்டியின் முதல் பாதி ஆட்டம் இரண்டு அணி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு மத்தியில் கோலின்றி முடிந்தது.

இரண்டாம் பாதியில் 58 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கழக அணி வீரரான கிறிஸ் ஜோன்ஸ் கோலடித்தார். இது இந்தப் போட்டிகளில் அவர் போட்ட முதல் கோலாகும்.

அஜக்ஸ் கழக அணி வீரர்கள் கோலடிக்க எவ்வளவோ முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை. இறுதியில் 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றது.

‘டி’ குழுவில் 5 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் லிவர்பூல் கழக அணி முதலிடத்தை வகிக்கிறது. அஜக்ஸ் கழக அணி 7 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுள்ளது.